பேஸ்புக் நிறுவனம் ஞானசார தேரரின் பெயரை தடை செய்துள்ளது..! - News View

About Us

About Us

Breaking

Sunday, July 28, 2019

பேஸ்புக் நிறுவனம் ஞானசார தேரரின் பெயரை தடை செய்துள்ளது..!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தனது பெயரை மாற்றிக்கொள்ள நேரிட்டுள்ளதாக அந்த அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனம் ஞானசார தேரரின் பெயரை தடை செய்துள்ளதே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

கலகொட அத்தே ஞானசார என்ற பெயரை பேஸ்புக்கில் பதிவிடும் போது அது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக அவரது பெயரை மாற்ற தீர்மானித்துள்ளோம். 

இதனால், இனிவரும் காலங்களில் ஞானசார தேரர், எமது பிக்கு என்ற புனைப் பெயரில் அழைக்கப்படுவார் எனவும் டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.

ஆத்திரமூட்டும் பதிவுகளை பேஸ்புக் நிறுவனம் தடை செய்துள்ளது. கலகொட அத்தே ஞானசார என்ற வார்த்தை ஆத்திரமூட்டும் வார்த்தை என பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கையில் உள்ள இணைப்பதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

இதன் காரணமாகவே அவரது பெயர் பதிவிடும் போது அதனை பேஸ்புக் வலைத்தளம் ஏற்றுக்கொள்ளாது தடுப்பதாக தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment