ஒரு கிராமத்தின் எல்லைக்குள் மற்றொரு கிராமத்தின் பெயர் - மட்டு. மாநகர முதல்வர் சரவணபவன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 10, 2019

ஒரு கிராமத்தின் எல்லைக்குள் மற்றொரு கிராமத்தின் பெயர் - மட்டு. மாநகர முதல்வர் சரவணபவன்

மஞ்சந்தொடுவாயில் இருக்கும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பெயர் மாற்றப்படும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.

ஊடகவியலாளரின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு பதிலளித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், ஒரு கிராமத்தின் எல்லைக்குள், இன்னொரு நகரத்தின் பெயரைக்கொண்ட ஒரு ஸ்தாபனம் இயங்குவதை அந்தக்கிராமத்து மக்கள் ஆட்சேபிக்கிறார்கள்.

காத்தான்குடி பிரதேசம் மண்முனைப்பற்று பிரதேசம் ஆகிய இரு பிரதேசங்களையும் காத்தான்குடி பிரதேச பொலிஸ் நிருவாகத்திற்குள் இணைப்பது அல்லது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தை காத்தான்குடி எல்லைக்கள் மாற்றுவது அல்லது காத்தான்குடி பொலிஸ் நிலையம் என்ற பெயரை மஞ்சம் தொடுவாய் என மாற்றுவதாகும். 

கல்லடி மணிக்கூண்டு கோபுரத்திலிருந்து கல்லடி கடற்கரைக்கு செல்லும் வீதி கிட்டத்தட்ட 30 வருடங்களாக மறிக்கப்பட்டு இருக்கிறது. இதனை திறந்துவிடுமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் கேட்டிருந்தேன். 

ஆனால் அதை மூடியுள்ள இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி ஒவ்வொரு கூட்டத்திற்கும் வருகிறார். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுத்ததாக தெரியவில்லை. அதனைத் தொடர்ந்து இதனை இராணுவத்தளபதி மகேஸ் சேனனநாயக்காவின் கவனத்திற்கும் என்னால் கொண்டுவரப்பட்டது என்றார்.

புளியந்தீவு நிருபர்

No comments:

Post a Comment