திருமலையில் தேசிய உணவுச்சாலை - கிழக்கு ஆளுநரால் திறந்து வைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 10, 2019

திருமலையில் தேசிய உணவுச்சாலை - கிழக்கு ஆளுநரால் திறந்து வைப்பு

பேராதனை விவசாயத் திணைக்களமும், கிழக்கு மாகாண விவசாய திணைக்களமும் ஒன்றிணைந்து நிர்மாணிக்கப்பட்ட "இலங்கையின் உண்மையான சுவை" "ஹெல பொஜுன் ஹல" தேசிய உணவுச்சாலை கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வாவினால் நேற்று (10) திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மட்டிக்களியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த உணவகத்தில் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் பானங்கள் பொதுமக்களின் நுகர்விற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

தொற்றா நோய்களின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கும், பாரம்பரிய உணவினை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், புற்றுநோய், நீரிழிவு நோய் போன்ற நோய்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கும் இந்த உணவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் பிரதி விவசாயப் பணிப்பாளர் எம். பரமேஸ்வரன், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி. எம் சரத் அபேகுணவர்தன, விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபள்யூ. எம். டபள்யூ வீரக்கோன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே. சிவநாதன், கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் கலாநிதி எஸ். எம் ஹுசைன், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என். ஏ. ஏ. புஸ்பகுமார உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ரொட்டவெவ நிருபர்

No comments:

Post a Comment