நுவரெலியா கந்தப்பளை தோட்டத்தில் உள்ள காவல் தெய்வ சன்னதியில் பௌத்த கொடி ஏற்றப்பட்டமையால் அந்தப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதோடு, பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டமானது இன்று காலை முன்னெடுக்கபட்டது. கந்தப்பளை தோட்டப் பகுதியிலுள்ள மாடசாமி காவல் தெய்வ ஆலயத்தில் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த தேரர் ஒருவரினால் இந்த பௌத்த கொடி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தோட்ட மக்களால் கந்தப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து நுவரெலியா பொலிஸ் வலய பொலிஸ் அத்தியட்சகர், நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் வேலு யோகராஜ் ஆகியோர் சென்று சம்மந்தப்பட்ட தரப்பினரிடம் கலந்துரையாடிய பின் கொடியை அகற்றினர்.
அதன் பின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.
சிவா ராமசாமி
No comments:
Post a Comment