சங்குகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 16, 2019

சங்குகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

மன்னார் மீன்வள உதவி இயக்குனரின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த கடற்படையினர், சட்டவிரோதமாக சங்குகளை பிடித்த ஒருவரை நேற்று (15) கைது செய்துள்ளனர். 

அதன்படி, மன்னார் மீன்வள உதவி இயக்குனரின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மன்னார், ஊருமலை பகுதியில் சோதனை நடத்தியதுடன், 70 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட 3212 சங்கு ஓடுகளுடன் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 

சந்தேகநபர் 31 வயதான தலை மன்னாரில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

மீன்வள மற்றும் நீர்வளச் சட்டத்தின்படி, 70 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட சங்கு ஓடுகளை விற்பனை செய்தல், கொண்டு செல்வது அல்லது ஏற்றுமதி செய்வதற்கான நோக்கத்துடன் வாங்குவது, காண்பிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் மற்றும் சங்கு ஓடுகளை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மீன்வள உதவி இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தரப்பு தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment