கள்ள நாணயத்தாள் வைத்திருந்த கடை உரிமையாளர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 16, 2019

கள்ள நாணயத்தாள் வைத்திருந்த கடை உரிமையாளர் கைது

5 ஆயிரம் ரூபா கள்ள நாணயத்தாள் வைத்திருந்த கடை உரிமையாளர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (15) கைது செய்துள்ளனர். 

யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பெருமாள் கோவில் பகுதியில் கடை வைத்திருக்கும் இவரிடம், யாரோ கொண்டு சென்று சாமான் வாங்கியுள்ளனர். அந்த காசை எடுத்துக் கொண்டு நேற்று இரவு கஸ்தூரியார் வீதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் அடித்து விட்டு, பணத்தை கொடுத்த போது, எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் கள்ள நோட்டு என தெரிவித்ததுடன், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

அந்த தகவலின் பிரகாரம், கடை உரிமையாளரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்த நபரை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றதாகவும், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

யாழ். நிருபர் சுமித்தி

No comments:

Post a Comment