தந்தையின் வழியில் செல்ல வேண்டாம் என சஜிதுக்கு மஹிந்த அறிவுரை - News View

About Us

About Us

Breaking

Sunday, July 28, 2019

தந்தையின் வழியில் செல்ல வேண்டாம் என சஜிதுக்கு மஹிந்த அறிவுரை

சஜித் என்ற அரசியல் இளைஞன் தனது தந்தையின் வழியில் செல்ல வேண்டாம் என கூறிக் கொள்ள விரும்புவதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலை கோல்டன் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தந்தையின் வழியிலேயே தானும் பயணிக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச கூறி வருகின்றார். அவ்வாறானால் அவருக்கும் அதோ கதிதான். 

தயவு செய்து அவரது தந்தையின் வழியில் செல்ல வேண்டாம் என்று அந்த இளைஞனுக்கு கூறிக் கொள்ள விரும்புவதாக மஹிந்த அறிவுரை வழங்கியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஏற்படுத்த 2015ஆம் ஆண்டு சர்வதேச நாடுகள் பாரிய ஒத்துழைப்பினை வழங்கின. 

இந்நிலைமை இம்முறை தொடராது எனவும், நாட்டின் உள்ளக இறையாண்மையில் தலையிடுவதற்கு எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கூட்டணியை தோல்வியடையச் செய்யவும் தற்போது அரசியல் சதிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர், இச்சதிகளை அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடித்தால் தேர்தல்களில் அமோக வெற்றி பெறலாம்” என்றார்.

No comments:

Post a Comment