பொறுப்பற்ற செய்திகளைப்பரப்பி குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளை தொண்டர்களாகிய நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 27, 2019

பொறுப்பற்ற செய்திகளைப்பரப்பி குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளை தொண்டர்களாகிய நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும்

எஸ்.எம்.எம்.முர்ஷித்
தலைவர்கள் ஒன்றுபட்டுள்ள சூழலில் தொண்டர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் - றிஷாத், அமீர் அலி மீதான குற்றச்சாட்டு தொடர்பில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுத்தீன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உட்பட அதே கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று காலை தமது அமைச்சுக்களை பொறுப்பேற்கச் சென்றதாகவும் அங்கே திருப்பி அனுப்பப்பட்டதாகவும் பரப்பப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை. குறித்த செய்தி ஒரு வதந்தியே.

முஸ்லிம் சமூகத்துக்கெதிராக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கெதிராக கட்சி பேதங்களை மறந்து தலைவர்கள் ஒன்றிணைந்து தமது பதவிகளை இராஜினாமா செய்து, சமூகம் சார்ந்த பணிகளை முன்னெடுக்கும் இன்றைய இக்கட்டான சூழலில் இவ்வாறான பொறுப்பற்ற செய்திகளைப்பரப்பி குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளை தொண்டர்களாகிய நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

சரியான தீர்வில்லாமல் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கமாட்டோம். பதவிகளை ஒன்றிணைந்து இராஜினாமாச் செய்த நாம், ஒன்றிணைந்து சரியான தீர்வுக்கு வந்த பின்னரே எல்லோரும் இணைந்தே பதவிகளை பொறுப்பேற்கவுள்ளோம் என்பதை முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி என்னிடம் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

ஆகவே, செய்திகளை வெளியிடுவோர் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமெனவும் யதார்த்தங்களை எழுதுமாறும் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன் என முன்னாள் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளருமான கே.பி.எஸ்.ஹமீட் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment