இலங்கை வருகிறார் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 10, 2019

இலங்கை வருகிறார் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில் டி கெர்ச்சோவ், மாலைதீவு மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இரு நாடுகளினதும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முயற்சியின் ஓர் அங்கமாக ஜூலை 11 ஆம் திகதி (நாளை) அவரது விஜயம் அமையவுள்ளது.

அவரது விஜயத்தின்போது இலங்கை அரசாங்க தரப்பு உறுப்பினர்கள், எதிர்க்கட்சி மற்றும் பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை மாலைதீவுக்கு செல்லும் கில் டி கெர்ச்சோவ், இலங்கை மற்றும் மாலத்தீவில் உள்ள இராஜதந்திர சமூகத்தின் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

2007 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் கில் டி கெர்ச்சோவ், ஐரோப்பிய சட்டம், மனித உரிமைகள், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்தை எதிர்ப்பது குறித்து பல கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment