எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி 6ம் குறிச்சியில் பெண்ணொருவர் 27.07.2019 சனிக்கிழமை மாலை மாடிப்படியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி ஆறாம் குறிச்சி தெற்கு எல்லை வீதியில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாயான கே.எம்.பஸ்மியா (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டுக்கு அருகாமையிலுள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்ற இவர் அங்கு வீட்டு மாடியில் பேசிக் கொண்டிருந்து விட்டு மஹ்ரிப் தொழுகைக்காக மாடியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த போது மாடிப்படிகளில் சறுக்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து உறவினர்கள் 1990 என்ற இலக்க அவர சிகிச்சை அம்புலனஸ் வாகனத்தை அழைத்து அதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்;துள்ளார்.
குறித்த பெண் மாடிப்படிகளில் வீழ்ந்ததில் தலைப்பகுதி பலமாக அடிப்பட்டதினால் உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேதப்பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் ஸ்தளத்திற்கு சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடாத்தியுள்ளதுடன் தொடர்ந்து விசாரணைகளை நடாத்தி வருவதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.

No comments:
Post a Comment