முல்லைத்தீவு, கொக்குத்துடுவாய் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 பேரை கடற்படையினர் நேற்று (15) காலை கைது செய்துள்ளனர்.
அதன்படி கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் கொக்குத்துடுவாய் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, இந்த சந்தேக நபர்களை அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களுடன் ஒரு டிங்கி படகு, வெளிப்புற மோட்டார் மற்றும் 510 அடி நீளமுள்ள அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலையையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் புல்மோதாய் பகுதியில் வசிக்கின்ற 28, 30 மற்றும் 44 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் டிங்கி படகு, வெளிப்புற மோட்டார் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலை முல்லைத்தீவு மீன்வள உதவி இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தரப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment