பாறுக் ஷிஹான்
கல்முனை பகுதியிலிருந்து அண்ணாமலை பகுதியை நோக்கிப் பயணித்த தனியார் பேரூந்து வண்டி மீது கல் வீச்சுத்தாக்குதலொன்று நடாத்தப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியில் இச்சம்பவம் இன்று சனிக்கிழமை (27) மதியம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளை தனியார் பேரூந்து வண்டியில் அதிகளவான மக்கள் பயணம் செய்துள்ள போதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
மேற்படி தாக்குதலினால் பேரூந்து வண்டியின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன், தாக்குதல் நடாத்தியவர்கள் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் பயணத்தை இடைநிறுத்திய தாக்குதலுக்குள்ளான பேரூந்திலிருந்து இறக்கப்பட்ட மக்கள் அநேகமானோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதைக் காண முடிந்தது.
சம்பவ இடத்திற்கு கல்முனைப் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



No comments:
Post a Comment