திரிபீடகத்தை பேணிப் பாதுகாப்பதற்கான திரிபீடக பாதுகாப்புச் சபை நியமனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 31, 2019

திரிபீடகத்தை பேணிப் பாதுகாப்பதற்கான திரிபீடக பாதுகாப்புச் சபை நியமனம்

திரிபீடகத்தை பேணிப் பாதுகாப்பதற்கான திரிபீடக பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

மல்வத்தை பீடத்தின் அனுநாயக்கர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர், அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் சங்கைக்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர், சோமாவதி ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய பஹமுனே சுமங்கல தேரர், சங்கைக்குரிய மெதகம தம்மானந்த தேரர், சங்கைக்குரிய திருக்குணாமலையே ஆனந்த தேரர் ஆகிய தேரர்களின் தலைமையில் 43 பேர் கொண்ட குழுவினர் ஜனாதிபதி அவர்களினால் இந்த திரிபீடக பாதுகாப்பு சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
2500 வருடங்களுக்கும் மேலாக நாட்டின் பிக்கு பரம்பரையின் பங்களிப்பில் பாதுகாக்கப்பட்டுவரும் தேரவாத பௌத்த சமயம் உள்ளிட்ட திரிபீடகத்தை தேசிய உரிமையாக்குவதற்கு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித்திட்டமும் மேற்கொள்ளப்பட்டது.

திரிபீடகத்தை பாதுகாக்கும் முக்கிய நோக்குடன் நாட்டின் அரச தலைவர் ஒருவர் பௌத்த சாசனத்திற்காக மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை நினைவுகூர்ந்து ஜனாதிபதி அவர்கள் அந்த தேசிய பொறுப்பை நிறைவேற்றியதுடன், ஜனாதிபதி அவர்களினால் இன்றைய தினம் நியமிக்கப்பட்ட திரிபீடக பாதுகாப்புச் சபையின் அனுமதியின்றி எதிர்காலத்தில் திரிபீடகத்தை மீண்டும் அச்சிடவோ அல்லது திருத்தங்கள் செய்வதற்கோ முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment