“பொலன்னறுவை” மன்னர் ஆட்சி முதல் ஜனாதிபதி ஆட்சி வரையிலான ஆய்வுத்தொகுப்பு மற்றும் “Moragahakanda Dream Reservoir” ஆகிய இரு நூல்களின் வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 31, 2019

“பொலன்னறுவை” மன்னர் ஆட்சி முதல் ஜனாதிபதி ஆட்சி வரையிலான ஆய்வுத்தொகுப்பு மற்றும் “Moragahakanda Dream Reservoir” ஆகிய இரு நூல்களின் வெளியீடு

“பொலன்னறுவை” மன்னர் ஆட்சி முதல் ஜனாதிபதி ஆட்சி வரையிலான ஆய்வுத்தொகுப்பு மற்றும் “Moragahakanda Dream Reservoir” ஆகிய இரு நூல்களின் வெளியீடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (31) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

புதிய அறிவினைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் கடந்த காலத்துடன் இணைந்து நிகழ்காலத்தை வெற்றிகொண்டு வளமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதற்கான ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலேயே இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் பொலன்னறுவை நகரம் முக்கிய பங்கு வகிக்கின்றது. 166 வருடங்களாக காணப்பட்ட பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியடைந்ததன் பின்னர் மின்னேரிய விவசாயக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டதுடன், மக்கள் மீண்டும் அதிகளவில் அங்கு குடியேறத் தொடங்கினர். மேலும் இப்பிரதேசமானது வளமான நெல் உற்பத்தியைக் கொண்ட பூமியாகவும் வரலாற்றுப் பெறுமதிமிக்க பிரதேசமாகவும் விளங்குகின்றது.
இப் பிரதேசம் சார்ந்ததாக கட்டியெழுப்பப்பட்ட வரலாறு மற்றும் காலப்போக்கில் ஏற்பட்ட முறையான அபிவிருத்தி பற்றிய விபரங்கள் பொலன்னறுவை ஆய்வு நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வரலாற்றை எடுத்துரைப்பதற்கு மாத்திரமன்றி சராசரி மனிதர்களின் அறிவுத் தாகத்தை தீர்க்கும் வகையிலான பல்வேறு துறைசார்ந்த கட்டுரைகளும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்விரு நூல்களையும் ஜனாதிபதி அவர்கள் மகாசங்கத்தினருக்கு கையளித்ததன் பின்னர் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஆகியோருக்கு வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் kiyawamu.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக இந்நூலின் e books வடிவில் வெளியிடப்பட்டன.

இவ்விரு நூல்களின் ஆசிரியர் குழாமினருக்கான நினைவு பரிசில்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்ததுடன், ஆசியர் குழாமினரால் ஜனாதிபதி அவர்களுக்கும் விசேட நினைவுப் பரிசொன்று வழங்கப்பட்டது.

மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், அறிஞர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட விசேட அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment