அமைதி, சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாடு மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 4 மணிக்கு கொழும்பு தாமரை தடாக அரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக பற்கேற்றலுடன் இடம்பெறவுள்ளது.
இம் மாநாட்டின் நோக்கம்,
இலங்கையில் சமயம் மற்றும் இனங்களுக்கிடையே அமைதி, சமாதானம், சகவாழ்வு, பொறுமை மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தல்.
இலங்கையில் வாழும் பல்வேறு மக்களைச் சார்ந்தவர்கள் சமாதானமாகவும் நல்லிணக்கமாகவும் நிராகரிக்கும் செய்தியை உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லல்.
அனைத்து மதங்களை சார்ந்தவர்களும் சகல விதமான அடிப்படைவாதங்களையும் நிராகரிக்கும் செய்தியை உலக மக்களுக்கு எடுத்துக்கூறுதல்.
சகல சமூகங்களும் தாய் நாட்டின் கலாசாரம், சம்பிரதாயம், பாரம்பரியங்களை மதித்து அவற்றினை பாதுகாத்துக் கொண்டு வாழ்வதற்கு ஊக்கமளித்தல்.
அனைத்து மக்களும் நல்லிணக்கத்தோடு வாழும் அமைதி மிக்க நாடு என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் மக்களது வாழ்வை இயல்பு நிலைக்குக் கொண்டு வருதல்.
பெரும்பான்மை சமூகத்தின் குறிப்பாக பௌத்த மக்களின் மத உணர்வுகளைத் தூண்டாமல் அவர்களது மத அனுஷ்டானங்களையும் பாரம்பரியங்களையும் மதித்து அந்நியோன்யமாக நடந்துகொள்ளல்.
எம்.ஏ.எம். நிலாம்

No comments:
Post a Comment