பத்து இலட்சம் காணி உறுதிப்பதிரம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 2050 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருகோணமலை மெக்கேசர் பொது விளையாட்டு மைதானத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்நிகழ்வு இன்று (14) இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட மீனவ குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம். எஸ். தௌபீக், அப்துல்லா மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், கே. துரைரட்ணசிங்கம், பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சி சேருவில ஆசன தொகுதி அமைப்பாளருமான சந்தீப் சமரசிங்க, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அப்துல்சலாம் யாசீம்
No comments:
Post a Comment