சிலாபம், மாதம்பை பழைய நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று (02) அதிகாலை வேளையில் பரவியுள்ள தீயினால், 03 லொறிகள் எரிந்து நாசமாகியுள்ளன.
ஒரு லொறி முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதோடு, 02 லொறிகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பழைய இரும்பு பொருட்களை சேகரிக்கும் வர்த்தக நிலையத்திலேயே தீ பரவியுள்ளதாகவும், இவ்வாறு பரவிய தீயை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment