எஸ்.எம்.எம்.முர்ஷித்
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான பாலைநகரில் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் மூலம் பாலைநகர் பாலர் பாடசாலை குறுக்கு வீதி புனரமைப்புக்கான ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் அஸீஸஷுல் றஹீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா கலந்து கொண்டதுடன், பாலைநகர் பள்ளிவாயல் நிருவாகத்தினர், இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர்கள், பிரதேச மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரின் ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாலைநகர் வீதி அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment