குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் மீண்டும் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
குருநாகல் வைத்தியருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதை வலியுறுத்தியும், இரகசியப் பொலிஸாரின் அறிக்கையில் தாம் திருப்தி பெறவில்லை என்பதை வலியுறுத்தியும் அத்துரலிய ரத்தன தேரரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இம்முறைப்பாட்டினை பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் நேற்று பொலிஸ் தலைமையகத்திற்குச் சென்று பதிவு செய்தார்.
படம் துஷ்மந்த மாயாதுன்ன
No comments:
Post a Comment