இஸ்லாம் எடுத்தியம்பும் சமாதானம் சகவாழ்வின் பால் வாழ்ந்திட இறைவன் அருள் புரிந்திட வேண்டும் வாழ்த்துச் செய்தியில் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 4, 2019

இஸ்லாம் எடுத்தியம்பும் சமாதானம் சகவாழ்வின் பால் வாழ்ந்திட இறைவன் அருள் புரிந்திட வேண்டும் வாழ்த்துச் செய்தியில் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா

ஈகைத் திருநாளாம் நோன்பு பெருநாளை எதிர்கொண்டிருக்கும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஐக்கியம், சமாதானம், நிம்மதி நிறைந்த நாளாக இந்நாளும் இனி வரும் நாட்களும் அமைந்திட வேண்டும் என உளமாற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.

எமது நாட்டிலே சிறுபான்மை சமூகமாக வாழுகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு அண்மைக்காலமாக ஏற்பட்டு வருகின்ற துயரங்கள், அசௌகரியங்கள், நெருக்கடிகள் என்பவைகள் விரைவில் நீங்குவதுடன், அவற்றை மிகவும் பொறுப்பாகவும், நிதானமாகவும் எதிர் கொண்டு சகிப்புத்தன்மையுடனும், சகோதரத்துவத்துடனும் இஸ்லாம் எடுத்தியம்பும் சமாதானம் சகவாழ்வின் பால் வாழ்ந்திட இறைவன் அருள் புரிந்திட வேண்டும் என இந்நாளில் வேண்டுகிறேன்.

தேசியத்தையும் தாய் நாட்டையும் நேசிக்கும் மக்களாக என்றும் தலை நிமிர்வுடனும் தனித்துவத்துடனும் வாழ்ந்து வந்த இந்நாட்டின் முஸ்லிம் சமூகத்தினுள் இருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய சில விசமிகளின் செயற்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள களங்கமும் தலை குணிவும் விரைவில் நீங்கி நிலைமைகள் வழமைக்கு திரும்பிட சங்கை மிகு ரமழான் வலுச் சேர்க்கட்டும் என எதிர்பார்ப்பதுடன், விசமிகளது மிலேச்சத்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த, காயமுற்ற, நிம்மதி, சந்தோசம் இழந்து அல்லல்படும் சகோதர உறவுகள் அனைவருக்காகவும் இந்நாளில் பிரார்த்திப்பதுடன், வீணான கொண்டாட்டங்கள் அனைத்தையும் தவிர்த்து , அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுடன் , இழந்து நிற்கும் நல்லுறவையும் சகோதரத்துவத்தையும் மீளக்கட்டி எழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்.

இப்புனித மிகு நாளிலே முஸ்லிம்களாகிய நாம் - எமக்குள் காணப்படும் வேற்றுமைகள், குரோதங்கள், கசப்புணர்வுகள் என அனைத்தையும் களைந்து ஒற்றுமை எனும் கொடியின் கீழ் சகோதரத்துவ வாஞ்சையுடன் புரிந்துணர்வுடன் செயற்பட உறுதி பூளுவோம் என வேண்டிக் கொள்கிறேன்.

அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்...

செய்யித் அலி ஸாஹிர் மௌலானா -MP 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 
மட்டக்களப்பு மாவட்டம்.

No comments:

Post a Comment