அரச அலுவலகங்களில் முஸ்லிம் பெண்கள் அபாயா அணிவதற்கு தடை விதித்துள்ள சுற்றுநிருபம் பொதுநிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சின் அறிக்கை இன்றைய (2) சன்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
குறித்த சுற்றுநிருபம் சம்பந்தமாக பொதுநிர்வாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பேசியபோது அச்சுற்றுநிருபத்தை இடைநிறுத்தி அபாயா அணிவதற்கு தடை ஏற்பாடாதவகையிலான புதிய சுற்று நிருபத்தை நாளை (3) திங்கட்கிழமை வெளியிடவுள்ளதாக இராஜாங்க அமைச்சரிடம் உறுதியளித்திருந்தார்.
அவ்வுறுதி மொழிக்கமைவாக தற்போது அச்சுற்றுநிருபத்தை அமைச்சர் இடைநிறுத்தியுள்ளார். இதனால் அபாயா அணியத் தடையாக அமையும் குறித்த சுற்றுநிருபத்தை அரச அலுவலகங்களில் அமுல்படுத்த வேண்டிய தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment