வன்முறை குற்றச்சாட்டில் கைதான அமித் வீரசிங்க பிணையில் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Monday, June 3, 2019

வன்முறை குற்றச்சாட்டில் கைதான அமித் வீரசிங்க பிணையில் விடுதலை

இனங்களுக்கிடையில் வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டாரெனும் குற்றச்சாட்டில் தெல்தெனிய பகுதியில் கைது செய்யப்பட்ட மஹாசோன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அமித் வீரசிங்க விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதமளவில் திகன, தெல்தெனிய முஸ்லிம் பிரதேசங்களில் கலவரத்தை ஏற்படுத்தி, வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட சொத்துகளுக்கு சேதம் விளைவித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அதனையடுத்து 7 மாதங்களின் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் அண்மையில் மினுவாங்கொட, குருநாகல் போன்ற பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட இனரீதியான தாக்குதல்களைத் தொடர்ந்து, இனங்களுக்கும் மதங்களுக்குமிடையில் வன்முறைகளைத் துாண்டும் வகையில் சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் அமித் வீரசிங்க கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment