தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரின் உடல்நிலை சோர்வடைந்து வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரை உடனடியாகப் பதவியிலிருந்து ஜனாதிபதி விலக்க வேண்டும் எனக் கோரி அத்துரலிய ரத்தன தேரர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
நேற்றுக் காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணவிரதம் காரணமாக அவரது உடல்நிலை சோர்வடைந்து வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தேரரை இன்று பகல் சோதனையிட்டார். தேரரின் உடல்நிலை சோர்வடைந்து வருகின்றது எனக் குறித்த வைத்தியர் அங்கு நின்றவர்களிடம் கூறியுள்ளார்.
இதேவேளை, தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சிங்கள மக்கள் மற்றும் சிங்கள - பௌத்த அமைப்பினர் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
Charles Ariyakumar Jaseeharan
No comments:
Post a Comment