நாட்டில் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் மார்க்கக் கடமை தவறாது கைக்கொண்டு புனித நோன்புப்பெருநாளை இன்று கொண்டாடும் அனைவருக்கும் எல்லாம்வல்ல இறைவனின் கிருபையும் சாந்தியும் சமாதானம் நிலைத்தோங்க எனது மனங்கனிந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரி வித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும். ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவருமான நஸிர் அஹமட் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது.
கடந்த சில ஆண்டுகளாக புனித ரமழான் மாதம் மலரும் காலங்களில் பல்வேறு அசம்பவிதங்கள் ஏற்பட்டு இந்தக் கடமையை எமது மக்கள் செய்வதற்கு தடைகள் ஏற்பட்டு வருகின்றமை கடந்தகால ஆய்வாக எம்மால் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
அவ்வாறே இந்த ஆண்டும் எமது சமூகம் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளாத சில சமூகவிரோதிகளால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களால் ஏற்பட் டிருந்த நெருக்கடிகளுக்கும் சோதனைகளுக்கும் மத்தியில் அனைத்து தடைகளையும் தகர்த்து எமது மக்கள் தமது மார்க்க கடமையை சிறப்பாக செய்து முடித்துள்ளமை இறைவனின் நாட்டம் என்பதை எடுத்துக் காட்டு கின்றது.
இன்பத்தைப்போல துன்பங்களையும் இறைவனின் சோதனை என மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உண்டாக்குவதோடு அனைத்து இன மக்களோடும் சாந்தி, சமாதானத்துடன் வாழும் வழிமுறைகளை நாம் கடை கொள்ள இவ்வேளையில் திடசங்கற்பம் கொள்ளவேண்டும்.
‘ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிக்கொள்ளுங்கள்’ என்ற குர்ஆன்வாக்குக்கு ஏற்ப எதிர்காலங்களில் நமது ஒற்றுமை ஏனைய சமூகங்களோடு எமக்கிருக்கும் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் எடுத்தியம்ப அல்லாஹ்வின் நாட்டம் வழிவகை செய்யட்டும் என வாழ்த்தி நிறைகொள்கிறேன் - என்றுள்ளது.
No comments:
Post a Comment