எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்கும் டிசம்பர் 7ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணையகம் தீர்மானிக்கும் ஓர் தினத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த முடியும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இன்று (01) காலை மொரட்டுவையில் இடம்பெற்ற வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த வருடத்தில் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இவ்வாறு விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் சேகரிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment