நாட்டில் பலவானன் ஒருவரை ஜனாதிபதியாக கொண்டு வருவதற்கு, இத்தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. இத்தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் இருப்பவர்களின் தகவல்கள் மூடி மறைக்காது, நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டுமென தமிழ்j; தேசியf; கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இராணுவ புலனாய்வாளர்கள் முன்னைய ஆட்சியாளர்களுக்கு உதவியாக இருப்பவர்கள், இப்படியாக நாட்டில், அசாதாரண சூழ்நிலையை உருவாக்குவதற்காக செயற்பட்டுள்ளார்கள் என்பது தற்போது தெளிவாக தெரிகின்றது.
மிக மோசமான, மிக கவலையான ஒரு சம்பவம் நடைபெற்று ஓரிரு தினங்களில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தன்னுடைய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் நான் தான் என்று அவசரமாக அறிவித்துள்ளார். இவ்வாறான ஒரு சூழ்நிலையில், தேர்தல் காலத்தை கையில் எடுத்து செயற்பட்டிருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம்.
ஜனாதிபதித் தேர்தல் வருட இறுதியில் வர இருப்பதனால், அவர் அந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராக இருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்பட்ட போது, அதில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு பலமான ஒருவர் விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போரை வெற்றிக்குக் கொண்டு வந்தவர் என்ற அவர் தான், நாட்டிற்கு திரும்பவும் தேவை என பலர் சொல்லக்கூடிய விதமாக இந்த தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன.
ஆகவே, பாதுகாப்புத் தரப்பின் மூலமாகவே, பணம் கொடுக்கப்பட்டு, வழி நடத்தப்பட்ட இந்த இயக்கம். இந்த தாக்குதல்களை நடத்தியிருப்பது எமக்குத் தெரியவருகின்றது. இந்த முழு விபரங்களும், வெளிப்படுத்தப்பட வேண்Lம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். நிருபர் சுமித்தி
No comments:
Post a Comment