நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினால் எமது பிரதேச மக்களிடத்தில் காணப்படும் அச்சமான நிலை சம்பந்தமாகவும், ஓட்டமாவடி பிரதேச சபையினாலும், கிராம சேவை உத்தியோகத்தர்களினாலும் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் ஒன்று கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் ஐ.டீ. அஸ்மியின் தலைமையில் இன்று 02.05.2019 வியாழக்கிழமை இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பிரதேச சபை உறுப்பினர்கள், சபையின் செயலாளர் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
21.04.2019 அன்று இடம்பெற்ற மிளேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும், உயிர் நீர்த்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியுடனும் மற்றும் காயப்பட்டவர்கள் விரைவில் சுகமடைய பிரார்தனையுடனும் மேற்படி நிகழ்வு ஆரம்பமாகியது.
தற்பொழுது நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு செயற்படும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முப்படைத் தரப்பினருக்கும் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் தற்பொழுது நிலவும் அசாதாரண சூழ்நிலையினால் மக்களிடத்தில் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு ஒரு அச்சமான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல அசௌகரிகங்களை எதிர்நோக்குகின்றனர்.
ஆகவே இது தொடர்பான தெளிவினை மக்களிடம் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையை சுமூகமான நிலமைக்கு கொண்டுவருவதற்காக அரசினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு சமூக ரீதியான ஒத்துழைப்புக்களை மக்களிடத்தில் இருந்து பெற்றுக் கொடுக்கும் பொறுப்பும், சமூக நிறுவனமாகிய பிரதேச சபையினதும், பிரதேச சபை உறுப்பினர்களினதும் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்களிடமும் காணப்படுகின்றது.
அந்த வகையில் மக்களிடத்தில் இது தொடர்பான உண்மை நிலவரத்தினை தெரியப்படுத்தியும், கடமையின் நிமித்தம் சோதனையில் ஈடுபடும் முப்படையினருக்கு தங்களது முழு ஒத்துழைப்பை இப்பிரதேச மக்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும், மற்றும் பிரதேச சபை, கிராம சேவை உத்தியோகத்தர்கள் இணைந்து எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் மேற்படி விசேட கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது.
No comments:
Post a Comment