பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மனு - சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, May 31, 2019

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மனு - சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கை

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. 

இதன்போது இந்த மனுவை முழுமையான நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசார​ணைக்கு எடுக்குமாறு சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு உள்ளிட்ட மூன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

வெல்லம்பிட்டிய, வென்னவத்தையைச் சேர்ந்த சமன் நந்தன சிறிமான்ன என்ற நபரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பிரதிவாதிகளின் கவனயீனத்தால் ஏற்பட்ட மனித படுகொலைகள் மற்றும் காயமேற்பட்ட சம்பவத்தில் குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment