குளியாப்பிட்டியில் பள்ளிவாசல் மீது மர்மநபர்கள் கல் வீச்சுத் தாக்குதல்!! - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 1, 2019

குளியாப்பிட்டியில் பள்ளிவாசல் மீது மர்மநபர்கள் கல் வீச்சுத் தாக்குதல்!!

குளியாப்பிட்டியில் பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று புதன்கிழமை கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏதண்டவெல பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இனந்தெரியாத நபர்கள் பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதுடன் சில தளபாடங்களையும் உடைத்துவிட்டு, பக்கத்தில் இருந்த சிறு ஹோட்டல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த நபர்கள் அருகில் இருந்த பாடசாலைக்குச் சென்று பூச்சாடிகளை வீசி சேதப்படுத்தி விட்டுச் சென்றனர் எனவும் அறியமுடிகின்றது.

குளியாபிட்டிய பொலிஸார் களத்துக்கு விஜயம் செய்து சி.சி.ரி.வி. கமரா உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment