பைரஹா பாம் நிறுவனம் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சகோதரர்களுக்கு உதவும் நோக்குடன் ஒரு மில்லியன் ரூபாவினை நன்கொடையாக வழங்கியுள்ளது.
கொழும்பு பேராயர் காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையிடம் இதற்கான காசோலையை பைரஹா பாம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு யஹூத் நளீம் 01.05.2019ஆம் திகதி நேற்று வழங்கி வைத்தார்.
நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சகோதரர்களுக்கு உதவும் நோக்குடன் நல்லெண்ண அடிப்படையில் பைரஹா பாம் நிறுவனத்தினரால் ஒரு மில்லியன் ரூபாவுக்கான இந்த காசோலை வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment