முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ, அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று 2ஆம் திகதி சாட்சியமளிக்கவுள்ளார்.
இன்று காலை 9.30 மணியளவில் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு விஜயதாச ராஜபக்ஸவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹபொல நிதியத்தில் 2,300 கோடி ரூபா மோசடி இடம் பெற்றுள்ளதாக அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது குறித்த விசாரணைகளுக்காக கடந்த 10 ஆம் திகதியும் விஜயதாச ராஜபக்ஸ ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment