குண்டுத் தாக்குதல் சம்பவமானது முஸ்லிம்களுக்கு மாத்திரமல்லாது எல்லா சமூகத்தையும் ஒரு சவாலுக்குட்படுத்தியுள்ளது - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 1, 2019

குண்டுத் தாக்குதல் சம்பவமானது முஸ்லிம்களுக்கு மாத்திரமல்லாது எல்லா சமூகத்தையும் ஒரு சவாலுக்குட்படுத்தியுள்ளது

நாட்டில் தீவிரவாத குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன், இச்சம்பவம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் அல்லாது எல்லா சமூகத்தையும் ஒரு சவாலுக்குட்படுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சீ. பைசால் காசீம் தெரிவித்தார்.

நிந்தவூர் பிரதேச செயலக பிரிவின் விசேட பாதுகாப்பு குழுக் கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களை நடாத்தி உயிர்களை காவு கொண்ட தீவிரவாதக் குழுக்களை எமது பிரதேசத்தில் முற்றாக ஒழிக்க பிரதேச மக்களாகிய நாம் சட்டத்தினை மதித்து பாதுகாப்புப் படையினருக்கு முழுமையான ஆதரவு வழங்குவதன் ஊடகத்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க முடியும்.

கடந்த யுத்த காலத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு பார்க்கப்பட்டார்களோ அதோபோன்று இன்று முஸ்லிம் மக்கள் மீதும் பல குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கொண்டு வருகின்றன. 

30 வருட கால யுத்தத்தின் எந்த பிரச்சினையும் அல்லாமல் 10 வருட காலம் அமைதியாக வாழ்ந்த மக்கள் மீண்டும் ஒரு பிரச்சிணைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எமது பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கிய விடயமாகும். 

பாதுகாப்பு விடயத்தில் ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம் ஊரின் தலைமையாக காணப்படுவதினால் இப்பிரச்சினையை தீர்த்துக் கொள்ளக் கூடிய வகையில் செயற்படுவற்கு பாதுகாப்பு நடவடிக்கைக்கு ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைமையில் முன்னெடுத்தல் சிறப்பாக அமையும் என நான் நினைக்கின்றேன்.

இச்சம்பவம் நாம் எதிர்பார்க்காத விடயமாக காணப்பட்டாலும் எதிர்காலத்தில் பிரதேசத்திற்குவரும் இனம் தெரியாத வியாபாரிகள், வீடு வாடகைக்கு பெறுவர்கள், தொழில் புரிவர்கள், புதிய நபர்கள் ஆகியோர்கள் விடயத்தில் கிராம சேவை உத்தியோகத்தர் ஊடாக விசாரிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தகவல் பதிவு செய்யப்படுவதன் ஊடாக இவ்வாறான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுத்து கொள்வது இலகுவான காரியமாகவும் இருக்கும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment