எச்.எம்.எம்.பர்ஸான்
ஓட்டமாவடி, மீராவோடைப் பகுதிகளில 29ஆம் திகதி திங்கட்கிழமை ஏற்பட்ட திடீர் மழையுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் அப்பகுதிகளிலுள்ள வீடுகளிலிருந்த மின்சாரப் பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் அன்று மாலை 3.30 மணியளவில் திடீரென்று மழையுடன் பாரிய மின் முழக்கம் ஏற்பட்டது இதனால் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட அப்பிரதேச மக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment