புத்தளம் கல்லடி எகோடகிரல்ஓய பிரதேசத்தில் இன்று (01) அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் கல்லடி எகோடகிரல்ஓய பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ. ஏ. ஸ்ரீயானி குசுமலதா எனும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இன்று புதன்கிழமை (01) அதிகாலை தனது கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் ௯ட்டத்தை வெளியேற்றுவதற்காக உயிரிழந்த பெண்ணின் மகன் வெளியே வந்துள்ளார்.
இவ்வாறு வெளியே சென்ற தனது மகன் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வருகை தராததையடுத்து குறித்த தாய், வீட்டுக்கு வெளியே வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, வீட்டு வளவுக்குள் நின்ற காட்டு யானையொன்று குறித்த தாய் மீது கடுமையாக தாக்கி, சுமார் 100 மீற்றர் வரை இழுத்துச் சென்றுள்ளதாக ௯றப்படுகின்றது.
இதனையடுத்து, அங்கு வந்த அயலவர்கள் குறித்த தாயை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் இவ்வாறு காட்டு யானைகளின் தாக்குதலினால் உயிரிழப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், 10 இற்கும் மேற்பட்டோர் அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
புத்தளம் நிருபர் ரஸ்மின்
No comments:
Post a Comment