மறு அறிவித்தல் வரை வட மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல் - News View

About Us

About Us

Breaking

Monday, May 13, 2019

மறு அறிவித்தல் வரை வட மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்

உடன் அமுலுக்கு வரும் வகையில், மறு அறிவித்தல் வரை வட மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இன்று (13) பிற்பகல் குருணாகல் மாவட்டத்தின் குளியாபிட்டி, ஹெட்டிப்பொல, பிங்கிரிய, தும்மலசூரிய பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, நாளை (14) அதிகாலை 4.00 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று பிறப்பிக்கப்பட்டது.

அதன் பின்னர், இன்று பிற்பகல் 3.00 மணியளவில் ரஸ்நாயக்கபுர, கொபேகனே ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நாளை அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

ஆயினும், பிரதேசத்தின் பாதுகாப்பை நிலைநாட்டும் பொருட்டு, மறு அறிவித்தல் வரை வட மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, மாகாணத்தின் சில பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தாக்குதல்களின்போது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment