முஸ்லிம் மக்களின் உற்பத்திகளை புறக்கணிப்பவர்கள் மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்யும் எரிபொருளையும் புறக்கணிக்க வேண்டுமென நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மங்கள சமரவீர இதனை கூறியுள்ளார்.
வியாபார நோக்கத்திற்காக செயற்படும் சிலர், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணம் காட்டி ஒரு சமூகத்தின் மீது ஏனைய சமூக மக்களின் மனதில் வெறுப்புணர்வை ஏற்படுத்த முயல்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்களுடைய வியாபார நிலையங்களில் பொருட் கொள்வனவில் ஈடுபட வேண்டாமென சிலர் தமது சுயநலத்துக்காக செயற்படுகின்றனரெனவும் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு புறக்கணிப்பில் ஈடுபடுபவர்கள் மத்திய கிழக்கில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளையும் புறக்கணிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment