பதில் பொலிஸ் மா அதிபராக சி.டீ. விக்ரமரத்னவை நியமிப்பதற்கு, அரசியலமைப்புப் பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நியமனத்திற்கான பரிந்துரையை அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பியிருந்தார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று (13ஆம் திகதி) மாலை கூடிய அரசியலமைப்புப் பேரவை குறித்த நியமனத்திற்கு அனுமதியை வழங்கியுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரையின் பேரில் சி.டீ. விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment