மட்டக்களப்பு - காயங்கேணி கடற்கரையை அண்மித்த பகுதி பாதுகாக்கப்படும் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வன உயிர் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
953 ஹெக்டேயர் பரப்பைக் கொண்ட காயங்கேணி கடற்கரையை அண்மித்த கடற்பகுதி நாட்டின் சமுத்திர சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாக்கப்படும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment