அமெரிக்க அரசின் துணை அட்டார்னி ஜெனரல் திடீர் ராஜினாமா - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2019

அமெரிக்க அரசின் துணை அட்டார்னி ஜெனரல் திடீர் ராஜினாமா


அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு தொடர்பான விசாரணையை மேற்பார்வையிட்ட அரசின் துணை அட்டார்னி ஜெனரல் ராட் ரோசென்ஸ்டெயின் டிரம்ப்புக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். 

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷியா பெரிய அளவில் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அமெரிக்காவின் உளவுத்துறையான மத்திய புலனாய்வு அமைப்பு (எப்.பி.ஐ.) இயக்குனர் ஜேம்ஸ் கோமி விசாரணை நடத்தி வந்தார். பின்னர் அவர் நீக்கப்பட்டு, சிறப்பு விசாரணை அதிகாரியாக எப்.பி.ஐ. அமைப்பின் முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லரிடம் இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. 

இந்த பணிக்கு அவரை நியமித்த அரசின் துணை அட்டார்னி ஜெனரல் ராட் ரோசென்ஸ்டெயின் விசாரணையின் முன்னேற்றங்கள் தொடர்பாக தீவிரமாக கண்காணித்து வந்தார். 

ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு குழுவின் விசாரணை அறிக்கை, அமெரிக்க அரசு நீதித்துறையிடமும், அட்டார்னி ஜெனரல் வில்லியம் பாரிடமும் தாக்கல் செய்யப்பட்டது. டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷியா எந்த வகையிலும் உதவவில்லை என்று கண்டறியப்பட்டதாக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

ராபர்ட் முல்லர் அறிக்கையில் பல விவகாரங்கள் முறையாக பரிசீலிக்கப்படவில்லை என டிரம்ப் அதிருப்தியாளர்க்ள் கருதும் நிலையில், துணை அட்டார்னி ஜெனரல் ராட் ரோசென்ஸ்டெயின் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு கடிதம் அனுபியுள்ளார். 

மே 11-ம் திகதியுடன் இந்த பதவியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள ஜெனரல் ராட் ரோசென்ஸ்டெயின் அந்நாட்டின் துணை அட்டார்னி ஜெனரலாக சுமார் 2 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment