இஸ்ரேல் பிரதமராக 5 வது முறையாக நேதன்யாகு பதவியேற்றார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2019

இஸ்ரேல் பிரதமராக 5 வது முறையாக நேதன்யாகு பதவியேற்றார்

இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்றதையடுத்து, நேதன்யாகு மீண்டும் பிரதமராக பதவியேற்றார். 

இஸ்ரேல் நாட்டில் ‘கென்னெசெட்’ என்றழைக்கப்படும் பாராளுமன்றத்துக்கு கடந்த 9ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான வலதுசாரி லிக்குட் கட்சி மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி பென்னி கான்ட்ஸ் தலைமையிலான புளு அன்ட் ஒயிட் கட்சிக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.

இதில், நேதன்யாகுவின் லிக்குட் கட்சி மற்றும் புளு அண்ட் ஒயிட் கட்சி தலா 35 இடங்களில் வெற்றி பெற்றது. லிக்குட் கட்சிக்கு வலதுசாரி கட்சிகளும் ஆதரவு அளித்தன. எனவே, நேதன்யாகு மீண்டும் பிரதமர் ஆவதற்கு 65 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. 

இதையடுத்து நேதன்யாகு தலைமையிலான புதிய பாராளுமன்றம் இன்று பதவியேற்றது. பிரதமராக நேதன்யாகு 5 வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியில் இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய முதல் பிரதமர் நேதன்யாகு என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அவர் பிரதமராக பதவியேற்றாலும், அவர் மீதான ஊழல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும். 

வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர் பதவி விலக தேவையில்லை என அரசின் தலைமை வழக்கறிஞர் கூறினார். குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு, அனைத்து முறையீடுகளும் முடிவடைந்தால் மட்டுமே இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment