தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடாக காணப்படுகின்றது என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு விரைவாக பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும்.
அரசாங்கத்தின் பலவீனத்தை உறுதிப்படுத்துவதற்காகவே இரண்டு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டது. இதுரைவரையில் வரவு செலவு திட்டத்தை மூன்றில் ஒரு பெரும்பான்மையில் தோற்கடித்துள்ளோம்.
மக்களுக்கு பயன்தராத வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எதிர்க் கட்சியினர் தொடர்ந்து செயற்படுகின்றோம்.
பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி மன்றம், மாகாண சபை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்மையினால் புதுவருட பிறப்பிற்கு அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளையும், மேலதிக கொடுப்பனவுகளையும் வழங்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் வஜிர அபேவர்தனவும் குறிப்பிட்டுள்ளமை பொய்யான கருத்தாகும்.
அமைச்சர் வஜிர அபேவர்தனவின் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டமைக்கும் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாமைக்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment