சிறைச்சாலைகள் புனரமைப்பு நிலையங்களாக உருவாக்கப்படல் வேண்டும் அல்லது அவை குற்றவாளிகளை உருவாக்கும் இடமாக மாறிவிடும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 2, 2019

சிறைச்சாலைகள் புனரமைப்பு நிலையங்களாக உருவாக்கப்படல் வேண்டும் அல்லது அவை குற்றவாளிகளை உருவாக்கும் இடமாக மாறிவிடும்

சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்களும் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களும் தனித்தனியே சிறை வைக்கப்படல் வேண்டும். சிறைச்சாலைகள் புனரமைப்பு நிலையங்களாக உருவாக்கப்படல் வேண்டும் அல்லது அவை குற்றவாளிகளை உருவாக்கும் இடமாக மாறிவிடும் என்று கொழும்பு மாவட்ட ஐ.ம.சு.மு எம்.பி உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (01) நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கள் மீதான வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது பசிக்காக தங்க மாலையை பறித்த குற்றச்சாட்டின்பேரில் சிறைக்கு செல்வபரும் போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டுக்காக சிறைக்கு செல்பவரும் ஒரே கூண்டில் இருக்கும் நிலையே எமது நாட்டில் இருக்கிறது. இது மிகவும் பாரதூரமானது. இதனால் பசிக்காக திருடியவர் மிகப்பெரிய குற்றவாளியாகவே சிறையிலிருந்து வெளியே வருகின்றார். இந்நிலை மாற்றம் அடைய வேண்டும்.

சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்களும் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களும் தனித்தனியே சிறை வைக்கப்படல் வேண்டும். சிறைச்சாலைகள் புனரமைப்பு நிலையங்களாக உருவாக்கப்படல் வேண்டும் அல்லது அவை குற்றவாளிகளை உருவாக்கும் இடமாக மாறிவிடும்.

போதைப் பொருள் கடத்தல் காரர்கள் கணவனின்றி குழந்தைகளுடன் தனியாக தவிக்கும் இளம் தாய்மாரை வைத்து தமது வியாபாரத்தை இலகுவாக முன்னெடுத்துச் செல்கின்றனர். பொருளாதார ரீதியாக பாதுகாப்பு பலப்படுத்தப்படுமாயின் எவரும் இதுபோன்ற விடயங்களுடன் தொடர்புபடும் நிலை உருவாகாது என்றார்.

No comments:

Post a Comment