மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கான(OBA) குவைத் கிளை நேற்று (29 மார்ச்) குவைத்தில் உள்ள Continental Hotel இல் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது
குவைத் மண்ணில் இலங்கைப் பாடசாலைகளுக்கான முதலாவது OBA அமைப்பு ஸாஹிராவின் குவைத் கிளை என்பது இங்கு வரலாற்றுச் சாதனையாக பதிவு செய்யப்படுகின்றது.
இந்த நிகழ்வுக்கு விஷேட அதிதியாக ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கான வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளரும் மற்றும் X-Zahirians இன் தற்போதைய தலைவருமான சகோதரர் ரிஸ்மி ராசிக் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. இதன் போது குவைத் OBA யின் 13 நிர்வாக சபை உறுப்பினர்களும், ஆறு உப குழுக்களுக்கான உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
நிர்வாக சபை உறுப்பினர்கள் பின்வருமாறு.
01. தலைவர் - சகோ. Fazly Majeed
02. உப தலைவர் - டாக்டர் Nawraz Mohammed
03. உப தலைவர் - சகோ. Wajihudeen Mohammed
04. பொதுச் செயலாளர் - சகோ. Akram Razool
05. தனாதிகாரி - சகோ. Safan Salam
06. திட்டங்களுக்கான பொறுப்பாளர் - சகோ. Azam Razool
07. மீடியா - சகோ. Riyas Abdeen
08. அங்கத்துவம் - சகோ.Rameez Rauff
09. விளையாட்டு - சகோ. Fawsar Shabdeen ,
10. விளையாட்டு- சகோ. Munshif Udayar
11. உப செயலாளர் - சகோ. Shamil Hussain
12. உப தனாதிகாரி - சகோ. Rinows Thazmil
13. நிர்வாக சபை உறுப்பினர் - சகோ. Harees Salih
இந்நிகழ்வின் போது குவைத் ஸாஹிரா OBA யின் மூத்த உறுப்பினர்கள் கௌரவப் படுத்தப்பட்டதுடன் கல்லூரியுடன் தொடர்பான பொது அறிவுப் போட்டி ஒன்றும் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது.
மிக விரைவில் ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் மாணவிகளுக்கான (OGA ) அமைப்பும் குவைத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது. மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் வளர்ச்சிக்கு குவைத் OBA யும் , OGA யும் தனது ஒத்துழைப்புக்களை வழங்கிக் கொண்டிருக்கும்.
ஷம்ரான் நவாஸ்
No comments:
Post a Comment