அரசாங்கத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும்போது தமிழ் பேசுவோருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 2, 2019

அரசாங்கத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும்போது தமிழ் பேசுவோருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்

அரசாங்கத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும்போது தமிழ் பேசுவோருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் அப்துல் ஹலீம் நேற்று பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார். 

இலங்கை நிருவாக சேவை, முகாமைத்துவ உதவியாளர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள் ஆகிய பதவிகளில் உள்ளவர்களால் தமிழ் மொழியில் சேவையாற்ற முடியாமை பாரிய குறைபாடாகவுள்ளது. எனவே இவ்வெற்றிடங்களை நிரப்பும்போது தமிழ் பேசுவோருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கள் மீதான வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இந்த அரசாங்கம் பாரிய சலுகைகளை வழங்கியுள்ளது. சம்பள அதிகரிப்பு என்றால் என்ன அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது பற்றி பலருக்கும் தெரியாது. அரசாங்க தொழில்களைப் பொறுத்தவரை இன்று அனைத்து தொழில்களுக்குமான சம்பளங்கள் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது பெருமளவில் அதிகரித்துள்ளன. 

நிர்வாக சேவையினரைப் பொறுத்தவரை தமிழ் மொழி பேசக்கூடியவர்கள் அங்கு இல்லாமை பெரிய குறைபாடாகும். எனவே தமிழ் மொழி பேசக்கூடியவர்கள் இதில் இணைத்துக் கொள்ளப்பட ​வேண்டும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment