2008 முதல் 2019 ஆம் ஆண்டுக்கு உட்பட்ட 10 ஆண்டு காலப்பகுதியில் ஹெரோயின் கஞ்சா வியாபாரத்துடன் தொடர்புடைய 6.5 இலட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பொலிஸ் மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசேட பொலிஸ் பிரிவு, போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு, புலனாய்வுப் பிரிவு, இலங்கை இராணுவம், சுங்கத் திணைக்களம் உட்பட நாட்டின் பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்புகளின் அடிப்படையிலேயே இவ்வளவு பேரை சட்டத்தின் முன் நிறுத்த முடிந்துள்ளது. இவர்களிடமிருந்து மொத்தமாக அண்ணளவாக 3 டொன் வரை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேவேளை, மேற்படி 10 ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் 2 டொன் கொக்கெயினும் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொக்கெயினின் விலை அதிகமாகவுள்ளதால் நாட்டின் செல்வந்த வர்க்கத்தினர் மாத்திரமே இதனைப் பயன்படுத்துகின்றனர்.
இன்றைய சூழலில் ஹெரோயின் ஒரு கிலோவின் விலை 1 கோடியாகவுள்ளதுடன், கொக்கெயின் ஒரு கிலோவின் விலை 2 கோடியாகவுள்ளது.
அத்துடன், கேரள கஞ்ஜா மற்றும் கஞ்ஜா விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட 4 இலட்சத்து 15 ஆயிரத்து 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொலிஸ் மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்ணளவாக 3 டொன்வரை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment