உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்வதற்கான கடிதத்தை தான் கட்சியின் தலைவரான அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கையளித்தேன் என வெளிவந்துள்ள செய்திகள் எவ்வித அடிப்படையும் அற்றவை என இராஜாங்க அமைச்சர் கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் இரவு 11.42 மணியளவில் என்னிடம் தெரிவித்தார்.
சாய்ந்தமருது விவகாரத்தை தொடர்புபடுத்தியே தான் இராஜினாமாச் செய்வதற்கான கடிதத்தை கட்சித் தலைமையிடம் வழங்கியதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.
எந்தக் காரணத்தையும் அடிப்படையாகக் கொண்டும் தான் எனது இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை தலைமையிடம் கையளிக்கவில்லை என்றும் அவர் என்னிடம் உறுதிபடத் தெரிவித்தார்.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
No comments:
Post a Comment