முஸ்லிம் மக்களுக்காகப் பேசுகின்ற தலைமையின் குரலை நசுக்கிட வேண்டுமென்று எல்லோரும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றார்கள் - அமைச்சர் அமீர் அலி - News View

About Us

About Us

Breaking

Sunday, March 31, 2019

முஸ்லிம் மக்களுக்காகப் பேசுகின்ற தலைமையின் குரலை நசுக்கிட வேண்டுமென்று எல்லோரும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றார்கள் - அமைச்சர் அமீர் அலி

எஸ்.எம்.எம்.முர்ஷித்
முஸ்லிம் மக்களுக்காகப் பேசுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையின் குரலை நசுக்கிட வேண்டுமென்று எல்லோரும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றார்கள் என விவசாய நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலகப் பிரிவில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்றக் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தின் மிக நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த வகுப்பறைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 29.03.2019ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை மற்றைய தலைமைகள் போல் குளிரூட்டப்பட்ட அறைக்குள்ளிருந்து கொண்டு தீர்மானிக்கின்ற விடயங்களல்ல. இந்த தலைமை உங்கள் பிரார்த்தனை மூலம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இன்று எமது கட்சி தலைவருக்கு பல சவால்கள் ஏற்பட்டிருக்கின்றது. நாங்கள் முஸ்லிம் மக்களைப் பற்றி, கல்வியைப்பற்றி, காணியைப்பற்றி, எங்கள் இருப்புக்கள் சரியாக இருக்க வேண்டும், பள்ளிவாயல்கள், உடைக்கப்பட்ட பள்ளிவாயல்கள் எனப்பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேசுகின்றோம்.

இதனால் பேசுகின்ற குரலை நசுக்கிட வேண்டுமென எல்லோரும் கங்கணங்கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைத்துவத்தை இல்லாமல் செய்துவிட வேண்டும் அல்லது முஸ்லிம் கட்சித்தலைவரை வைத்து நசுக்க வேண்டுமென்ற விடயத்தை நாங்கள் கடந்த காலத்தில் கண்டோம்.
பாராளுமன்றத்தில் சிங்களப்பெரும்பான்மை தலைவர்கள் எங்களிடத்தில் கேட்கின்றார்கள். உங்கள் தலைவரைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் துவம்சம் செய்ய வரும் போது மற்றைய முஸ்லிம் கட்சித்தலைவர்கள் ஏன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று கேட்கின்றனர்.

நாங்கள் மரணிக்கும் வரை உங்களுக்காகப் பேசுவோம் என்று சத்தியம் செய்து வாக்குக் கேட்டவர்கள். அதனைச் செய்து தருவோம். இறைவன் எங்களுக்கு அதனை இலகுவாக்கித் தருகின்றான் என்றார்.

No comments:

Post a Comment