நான் ஐக்கிய தேசிய கட்சியில் 28 வருடங்கள் எனது அரசியல் காலத்தை வீணடித்து விட்டேன் - அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப் - News View

About Us

Add+Banner

Sunday, March 31, 2019

demo-image

நான் ஐக்கிய தேசிய கட்சியில் 28 வருடங்கள் எனது அரசியல் காலத்தை வீணடித்து விட்டேன் - அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப்

55826977_2669184633110239_3659455944581971968_n
எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஐக்கிய தேசியக் கட்சியில் 28 வருடங்கள் எனது அரசியல் காலத்தை வீணடித்த போது இந்த மூன்று வருடங்களில் தான் அரசியலுக்கு அர்த்தத்தையும், சமூகத்திற்கு சேவை செய்யக்கூடிய பதவியையும் அமைச்சர் றிசாட் பதியூதீன் பெற்றுத்தந்துள்ளார் என துறைமுக மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலகப் பிரிவில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்றக் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தின் மிக நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த வகுப்பறைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 29.03.2019ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் பாராளுமன்றத்தில் சட்டங்கள் அமுலாக்கப்படுகின்ற போது, ஏனைய தலைவர்கள் மௌணித்திருக்கின்ற போது உரிமைக்காகப் பாடுபாகின்ற தலைமைத்துவம் என்றால் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரையே சாரும்.

நான் ஐக்கிய தேசிய கட்சியில் 28 வருடங்கள் எனது அரசியல் காலத்தை வீணடித்த போது இந்த மூன்று வருடங்களில் தான் அரசியலுக்கு அர்த்தத்தையும், சமூகத்திற்கு சேவை செய்யக்கூடிய பதவியையும் எமது தலைவர் அமைச்சர் றிசாட் பதியூதீன் பெற்றுத்தந்தார்.

இன்று எமது சமூகத்திற்கு சேவை செய்யக்கூடிய வாழ்வாதாரம், புனர்வாழ்வு, விவசாயப்பிரச்சனை, இளைஞர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், வடக்கு கிழக்கிலுள்ள துறைமுகத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய வகையிலும், தேசிய வருமானத்தையும், இளைஞர்களின் உணர்வுகளையும் நிவர்த்தி செய்கின்றதான அமைச்சை எனக்கு பெற்றுத் தந்துள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *