மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தததாக டிரம்ப் தெரிவிப்பு - News View

About Us

Add+Banner

Breaking

  

Friday, March 1, 2019

demo-image

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தததாக டிரம்ப் தெரிவிப்பு

201903012055216663_Trump-claims-very-good-Kim-relations-despite-failed-summit_SECVPF
வியட்நாமின் ஹனோய் நகரில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் உள்ள ஹோட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் நேற்று சந்தித்தனர். அவர்கள் வியட்நாம் அரசு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் பங்கேற்றனர்.

நேற்று காலை மீண்டும் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பில் அணு ஆயுதத்தை முழுமையாகக் கைவிடுவது மற்றும் பொருளாதார தடைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரு தரப்புக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

தன் மீதான பொருளாதார தடையை முழுமையாக நீக்க வேண்டும் என வட கொரியா முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது. இதையடுத்து டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் இடையிலான 2–வது உச்சி மாநாடு தோல்வியில் முடிந்துள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *