மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (01) பிற்பகல் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
மதுபோதையில் வாகனத்தை செலுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவர் செலுத்திச் சென்ற வாகனம், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment